Address
Vijayamangalam, Tirupur
Phone Number
BA.Tamil

தமிழ்த்துறை

தமிழ்ச்சிறப்பு I

தமிழ் பாடங்கள் மூலம் எழுத்தாளுமை, மொழியாளுமை, பேச்சாளுமை போன்றவைகளை மாணவர்களிடம் வளர்க்கலாம்
  • பக்தி இலக்கியம்
  • நாட்டுப்புற இலக்கியம்
  • பயண இலக்கியம்
  • கடித இலக்கியம்
  • சிற்றிலக்கியம்
  • பேரிலக்கியம்
  • காப்பியங்கள்
  • இலக்கணம்
  • நன்னூல்
  • தொல்காப்பியம்
  • யாப்பருங்கலகாரிகை
  • தண்டியலங்காரம்
  • நம்பியகப்பொருள்
  • புறப்பொருள் வெண்பாமாலை
  • இதழியல்
  • புதினம்
  • சிறுகதை
  • மானுடவியல்
  • மொழியியல்
  • மொழி பெயர்ப்பியல்
  • ஊடகங்கள்
  • அலகுத்திட்டம் தயாரித்தல்

தமிழ்ச்சிறப்பு II

  • பாடம் கற்பித்தலுக்கான திட்டம் வடிவமைத்தல்
  • கரும்பலகை பயன்படுத்தியும் பாடம் தொடர்பான குறும்படங்கள் மூலம் துறை சார்ந்த பாடங்களில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்பித்தல்.
  • மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்தித் தருதல்.
  • அற இலக்கியங்கள் வழி ஒழுக்கங்களைக் கற்றுத் தருதல்
  • பக்தி இலக்கியங்கள் வழி பக்திநெறிகளை உணர்த்துதல்.
  • தமிழில் உரைநடை இலக்கியப் படைப்பாளர்களின் சிந்தனைகளை எடுத்துரைத்தல்.
  • பிழையின்றி எழுத இலக்கணங்களைக் கற்றுத் தருதல்.
  • தமிழ் இலக்கிய வரலாற்றில் அற இலக்கியம் மற்றும் உரைநடையின் தமிழ்ப்பணியை அறிதல்.
  • நடைமுறை வாழ்வியலுக்குத் தேவைப்படும் ஆங்கிலக் கடிதத்தை தமிழாக்கம் செய்தலுக்கான பயிற்சி அளித்தல்.
  • காப்பிய இலக்கியங்கள் வாயிலாக அற மற்றும் சமூகசிந்தனைகளை அறிந்து கொள்ளுதல்.
  • இலக்கியம் காட்டும் சமூக மேம்பாட்டினை உணரவைத்தல்.
  • பா அணி வகைகளைக் கற்றுத் தந்து படைப்பாக்கத்திறனை வளர்த்தல்.
  • தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியங்கள் மற்றும் புதினங்களின் வளர்ச்சியை அறிதல்.
  • சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல் முறைகளை அறிய வைத்தல்
  • நாடகம் வெளிப்படுத்தும் வரலாற்றுச் செய்திகளை அறிதல்.
  • தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் மற்றும் நாடக இலக்கியங்களை அறிய செய்தல்.
  • தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாகக் கல்வி கற்கின்றனர்.
  • மனித ஆற்றலை வளமாக்கவும் ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் தமிழ்மொழி கல்வியால் மட்டுமே முடியும் என்பதைக் கற்றுக் கொள்கின்றனர்.
  • சங்க இலக்கியம் வாயிலாக மக்கட்பண்பை வளமாக்கும் விதையின் மூலம் வாழ்வியல் விழுமியங்களை உணர்ந்து கொள்ளுதல்.
  • படைப்பாளர்களின் சிறுகதையில் வெளிப்படும் சமூகச் சிந்தனைகளை அறிந்து விழிப்புணர்வைப் பெறுதல்.
  • தமிழில் பட்டம் பெறுபவர்கள் தரணியாள முடியும் என்பதற்கே தமிழகமே சான்றாக உள்ளது.
  • பிஏ பிஎட் எம்ஏ எம்எட் பயில்வோருக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியராகப் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளது.
  • இதேபோல கலை அறிவியல் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்துக்கு எம்ஏ, எம்ஃபில், பிஎச்.டி படித்தோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • குறிப்பாக அரசின் பல்வேறு துறைகளில் தமிழ் பயின்றோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன
  • போட்டித் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதாக வெற்றி பெறமுடியும்.
  • பத்திரிக்கைகள், சின்னத்திரை, வானொலி, பண்பலை – இவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ் படித்தோர்க்கு நல்ல வாய்ப்புகள் உண்டு.
  • ஊர்தோறும் தனியார் தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிய பணிகளில் தமிழ் பட்டதாரிகள் பங்கேற்கலாம்.

துறையின் தனித்துவம்

  1. தமிழ்த்துறை 2020 – இல் தொடங்கப்பட்டது.
  2. தமிழ் இலக்கியம் படிப்பின் முக்கிய நோக்கம்
  3. சிறந்த ஆசிரியர்களாகவும், பத்திரிக்கையாளர்களாகவும், செய்தி வாசிப்பாளர்களாகவும், கவிதை ஆசிரியர்களாகவும், நூலாசிரியர்களாகவும் மேலும் இதுபோன்ற பல துறைகளில் பணியாற்றுவது போல் மாணவர்களை உருவாக்குவது.
  4. எதிர்கால வளர்ச்சிக்காக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல துறைகளுக்கிடையேயான நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை நடத்தியுள்ளது.
நீண்ட காலநோக்கம்